Beeston Town வளாகத்தில், உணவுத் தேவை உள்ளவர்களுக்கான சேவை ஒன்றினை வழங்கியிருந்தோம்

நிகழ்நிலைப்படுத்தல்…

30/01/2021

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

தற்காலத்தில் அதிகரித்திருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும், நமது மாற்று சமூகத்தினர், தமது அமைப்புகளூடாக பலதரப்பட்ட சேவைகளை, தாம் வாழும் தேசத்திற்கு வழங்கி வருகிறார்கள்.

இதனடிப்படையில், “நொட்டிங்கம் துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினருடன்” இணைந்து,

“தமிழர் நலன்புரிச்சங்கம் நொட்டிங்கம்செயார்” ஆகிய நாங்கள், இன்று Beeston Town வளாகத்தில், உணவுத் தேவை உள்ளவர்களுக்கான சேவை ஒன்றினை வழங்கியிருந்தோம்.

நமது சேவையினை அனைவரும் அறிந்துகொள்ளும் நோக்கில் நாம் மேற்கொண்ட இந்த முயற்சி மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியது. இதன்மூலம் வரும் கிழமைகளில், உணவுத் தேவை உள்ளவர்கள் நம்மை அணுகுவதற்கான நல்ல ஒரு வழிமூலத்தை உருவாக்கியுள்ளோம்.

உணவினை மிகவும் சிறப்பாக சமைத்து வழங்கி, எம்மையும் தம்முடன் இணைத்து, இந்த அன்னதான சேவையினை நெறிப்படுத்திய நொட்டிங்கம் துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.

நன்றி,

வணக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன